இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முள்ளிப்பொத்தானை திசபுரம் 15வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளிப்பொத்தானை ஹமீதியா விளையாட்டு கழகத்தின் அனுசரணையோடு ஹமீதியா விளையாட்டு மைதானத்தில் 11/02/2023 ம் திகதி பி. ப. 3:00 மணியளவில் இறுதி போட்டி சிறப்பாக இடம்பெற்றது. இந்த இறுதி போட்டியில் கிண்ணியா அணிகளான Nova vs Al Fc மோதி Nova அணி 5:1என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தை வெற்றி கொண்டது இதில் வெற்றி பெற்ற Nova அணிக்கு 50000 ரூபா பணப்பரிசு மற்றும் ஆறு அடி கிண்ணமும், இரண்டாமிடம் பெற்ற Al Fc அணி 25000ரூபா பணப்பரிசு மற்றும் ஐந்து அடிக்கிண்ணமும் சிறந்த வீரர்கான 7000ரூபா பணப்பரிசும். கிண்ணமும் மற்றும் சிறந்த கோல் காப்பாளர்க்கான 7000ரூபா பணப் பரிசும் கிண்ணமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக 223ம் படைப்பிரிவின் comanter பீரிஸ் அல்விஸ் 223 படைப்பிரிவின் திருகோணமலை மாவட்ட தளபதி piravath rangajeeva 15ம் படை பிரிவின் commanting officer mejer genaral Naleen marasinga கலந்து சிறப்பித்தனர். இந்த நிகழ்வை சிறப்பிக்க பௌத்த மதகுரு, இந்து மதகுரு, இஸ்லாமிய மதகுரு போன்றோர் கலந்து கொண்டு அவர்களது நல் ஆசிகளோடு சேர்ந்து ஏனைய கலை நிகழ்வுகளாக தம்பலகாமம் ஆதி கோணஸ்வரா மாகா வித்தியாலய மாணவிகளின் நடனம், மற்றும் ஹமீதியா முன்பள்ளி மாணவிகளின் நடனம்,சிங்கள மகா வித்தியாலய மாணவிகளின் நடன நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன. மேலும் இந்த போட்டி மற்றும் கலை நிகழ்வுகளை தொகுத்து வழங்கி சிறப்பித்தவர்களான. இராணுவ படைவீரர் eranga, power boys முகாமையாளர் sskil anwar Suratha tamil unit Assistent directer kayathu mohamed muzafir, Suratha repoter shaheeth ஆகியோருடன் இந்த நிகழ்வின் புகைப்பட தொகுப்பாளராக power boys camera man sameer Aslam ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.