இந்த ஒதுக்கீட்டிற்குள் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பான செலவுகளை நிர்வகிப்பது குறித்தும் அமைச்சரவை அவதானம் செலுத்தியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை அடுத்த வருடத்தில் நடத்துவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக, உரிய தேர்தல் சட்டங்களுக்கான திருத்தங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.