உலகம் முழுவதும் எரிபொருளுக்கான தேவை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக குறைந்துள்ளதுடன் மசகு எண்ணெய் தயாரிப்பும் தேக்கமும் அதிகரித்துள்ளது.
மசகு எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக் கொள்வது தொடர்பாக சவுதி தலைமையிலான ஒபெக் நாடுகள் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தின.
குறித்த பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படாமையினால் மசகு எண்ணெய் விலையைக் குறைப்பதாக சவுதி இன்று அறிவித்துள்ளது.
ரஷ்யா ஒபெக் முடிவுக்கு சம்மதிக்காமையினால் அதற்கு பதிலடி தரும் வகையில் மசகு எண்ணெய் விலையினை பீப்பாய் ஒன்றுக்கு 31 டொலர் ஆகக் சவுதி குறைந்துள்ளது.
சவுதி அரேபியாவின் இந்த விலை குறைப்பு நடவடிக்கையினால் 29 ஆண்டுகளின் பின்னர் மசகு எண்ணெயின் விலை இந்த அளவு சரிந்துள்ளமை இதுவே முதல்முறையென்பது குறிப்பிடத்தக்கது.