ஒன்றிணைந்து மகிழ்வுடன் கற்கும்போது வளர்ச்சியடைகின்றோம் முதிர்ச்சியடைகின்றோம். நண்பர்கள், ஆசிரியர்கள், கல்வி கற்க உதவுபவர்கள் என அனைவரோடும் நல்ல உரையாடலை நாம் ஏற்படுத்துகின்றோம்

அறியாமை பயத்தை வளர்க்கின்றது, பயம் சகிப்புத்தன்மையின்மையை வளர்க்கின்றது என்றும், எப்போதும் புதியவற்றைக் கற்றுக்கொள்ளவும் சிறந்ததை வழங்க அனுமதிக்கவும் உதவுகின்ற அறிவு, பிறருடனான உரையாடலில் நம்மை வளர்க்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 3 சனிக்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் இத்தாலியின் வரேசே பகுதியில் உள்ள Collegio Rotondi (gorla minore) பள்ளி பொறுப்பாளர்கள், மாணவர்கள் ஆசிரியர்கள் என ஏறக்குறைய 3000 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மகிழ்ச்சியுடன் ஒன்றிணைந்து கற்றல் என்பது முதிர்ச்சியடைதலையும், வளர்ச்சியடைதலையும் வெளிப்படுத்துகின்றது என்று கூறினார்.

உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும் என்று நமக்குக் கற்பித்த இயேசு, உண்மையின் வழியில் ஒன்றிணைந்து நடக்க நம்மை அழைக்கின்றார் என்றும், ஒன்றிணைந்து மகிழ்வுடன் கற்கும்போது வளர்ச்சியடைகின்றோம் முதிர்ச்சியடைகின்றோம். நண்பர்கள், ஆசிரியர்கள், கல்வி கற்க உதவுபவர்கள் என அனைவரோடும் நல்ல உரையாடலை நாம் ஏற்படுத்துகின்றோம் என்றும் கூறினார் திருத்தந்தை.

புதிய விடயங்களுக்கு திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், முக்கியமற்றவைகளான சமூகவலைதளங்களில் பெறும் விருப்பம், (like, comment, followers) செய்தி, பின்தொடர்பவர்கள் போன்றவற்றின் கருத்துக்களால் தாக்கப்படாமல், கவனமாக இருக்கவேண்டும், இல்லையென்றால் இவற்றால் நமது சுதந்திரம் பறிக்கப்படும் என்றும் எடுத்துரைத்தார்.

அதேவேளையில் அவசியமில்லாதவைகள், வேறுபட்ட கருத்துகள், சிந்தனை முறைகள் போன்றவற்றை ஏற்றுக்கொள்ளவும், மாற்றிக்கொள்ளவும் பயப்பட வேண்டாம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், எப்போதும் கேட்கவும் விவாதிக்கவும் கூடிய வகையில்  உண்மையை நேசிக்கக் கூடியவர்களாக இருங்கள் என்றும் மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.

By JF

Leave a Reply

You missed

புதிய அமெரிக்க வரிக் கொள்கை தொடர்பில் அவசர தீர்மானத்தினை எட்டுமாறு ரணில் வலியுறுத்து!!
———————————————
அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் இந்த நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புக்களை இழக்கும் அபாயம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (16) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதை அவசரநிலையாகக் கருத வேண்டும் என்றும், புதிய அமெரிக்க வரிக் கொள்கை தொடர்பாக அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து நாட்டிற்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

“கட்டணங்கள் அதிகரிக்கும் போது, பொருட்களை வாங்கும் நுகர்வோரின் எண்ணிக்கை குறைகிறது. நாம் அந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். இதைத் தடுக்க முடியாது, இது நடந்து கொண்டிருக்கிறது. இதன் விளைவுகளில் ஒன்று வேலை இழப்பு.”

பலர் இது ஒரு மில்லியன் என்று கூறுகிறார்கள். அது ஒரு லட்சம் அல்லது அதற்குக் குறைவாக இருந்தாலும், அந்தத் தொகை பெரியதாக இருக்கும். மேலும் சம்பந்தப்பட்ட மற்றவர்கள்… தங்கும் வசதிகளை வழங்குபவர்கள், கடைகள் நடத்துபவர்கள்… இது அனைவரின் வருமானத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். நமது பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. நமது செலுத்தும் நிலுவைக்கு இன்னொரு சுமை வருகிறது.

நாம் பெறும் பணத்தின் அளவு குறைந்து வருகிறது. எனவே, நாம் கடன் வாங்கும் கடனின் அளவு அதிகரிக்கிறது. இந்த நெருக்கடியால் ரூபாயின் மதிப்பு மேலும் சரியும். பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையக்கூடும். எனவே, இலங்கைக்கு பல சிக்கல்கள் உள்ளன. எனவே அமெரிக்காவுடன் ஒன்றைப் பற்றி விவாதிக்கவும்.

உள்ளூர் மட்டத்தில் இந்தப் பிரச்சினைகளை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம்? எனவே, இதை ஒரு அவசரநிலையாகக் கருதி, அரசாங்கம் என்ன நடவடிக்கைகள் எடுக்கும் என்பது குறித்து நாட்டிற்குத் தெரிவிக்கப்பட வேண்டும். “இல்லையெனில், இந்த நிலைமை குறித்து நாம் அறிக்கைகளை வெளியிடாவிட்டால், ஒன்றன்பின் ஒன்றாக பிரச்சினைகள் எழும்.”