கொழும்பு மாநகர சபையினால் அண்மையில் அதிகரிக்கப்பட்ட இறுதிச் சடங்குகளுக்கான கட்டணங்களை குறைப்பதற்கு ஜனாதிபதியின் தலையீடு அவசியம் என கொழும்பு மாநகர சபை கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அல்பிரட் சம்பத் ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்த கட்டண அதிகரிப்பின்படி கொழும்பில் வசிப்பவர்களுக்கு 1,500 ரூபாயாக வசூலிக்கப்பட்டு வந்த தொகை தற்போது 15,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

5,000 ரூபாயாக இருந்த கட்டணம் 25,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஏழை மக்கள் அதிக தகனக் கட்டணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது, எனவே குறித்த கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply