லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று முற்பகல் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, கடந்த ஜனவரி மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விற்பனை செய்யப்பட்ட விலையிலேயே தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வாகவும், அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலும் லிட்ரோ சமையல் எரிவாயு விலையினை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.