அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதை அடுத்து, தனுஷ்கோடியையும், இலங்கையையும் இணைக்கும் புதிய கடல் பாலம் தொடர்பில் இந்திய மத்திய அரசு திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி இந்தியாவின் – தனுஸ்கோடியை இலங்கையுடன் இணைக்கும் கடல் பாலம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவுபடுத்த உள்ளதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ராமர் தமது படையினை இலங்கைக்கு அழைத்துச் செல்ல இந்த தனுஷ்கோடியில் இருந்து தான் ஹனுமானுக்கு உத்தரவிட்டு இருந்ததாக இராமாயனத்தில் கூறப்படுகின்றது.

இந்தநிலையில் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரை பாலம் அமைக்க இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கமைய சுமார் 23 கிலோமீற்றர் நீளமுள்ள பாலத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறு தொடர்பில், இந்திய மத்திய அரசு விரைவில் ஆராய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜூலை மாதம் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டெல்லி சென்றிருந்த போது, குறித்த திட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த நீண்ட கடல் பாலத்திற்கு பெரும் நிதி தேவைப்படும் என்றாலும், இந்தத் திட்டத்தால் இரண்டு நாடுகளும் மிகப் பெரியளவில் பயன்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், இரு நாடுகளையும் இணைக்கும் வகையிலான பாலத்தை அமைக்க முடியுமா என்பதைப் பற்றி அரசு தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்களை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்

இரண்டு நாடுகளைக் கடல் பாலம் மூலம் இணைக்க வேண்டும் என்பது குறித்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply