பெரிய வெங்காயம், வெள்ளை சீனி, செத்தல் மிளகாய் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் அதிகபட்ச விலைகள் மீதான விதிமுறைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதற்கமைய ஒரு கிலோகிராம் செத்தல் மிளகாயின் அதிகபட்ச மொத்த விலையாக 900 ரூபாவும், அதிகபட்ச சில்லறை விலையாக 1,100ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் மொத்த விலை 280 ரூபாவாகவும், சில்லறை விலை ரூ.280 முதல் ரூ.320 ஆகவும் உள்ளது.

அதிகபட்ச விலை


இதேவேளை இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 380 ரூபாவாகவும், சில்லறை விலை ரூ.420 முதல் ரூ.580 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச விலை உயர்வை தடுக்கும் வகையில் இந்த விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

You missed