திருகோணாமலை மாவட்டம், குச்சவெளி பிரதேசத்தைச் சேர்ந்த திரு அப்துல் கரீம் ஹக்குல் முபீன் மற்றும் திருமதி: ஹம்ஸா நதீரா தம்பதிகளின் அன்புப் புதல்வியாகிய அல்-ஹாபிழா, அல்-ஆலிமா ஹஸ்மத் பானு என்பவர் 6 மாதங்களில் புனித அல்-குர்ஆனை மனனமிட்டு சாதணை படைத்துள்ளார்.
இவரைப் பாராட்டி கௌரவிக்கும் முகமாக புத்தளம்,மதுரங்குளி அஸீஸியா அரபுக் கல்லூரி நிருவாகம் அம்மாணவி முற்றிலும் இலவசமாக புனித மக்காவிற்கு உம்ராக் கடமையை நிறைவேற்ற ஏற்பாடு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
KVC மற்றும் குச்சவெளி மக்கள் சார்பாக இவரை பாராட்டுவோம்!!