“ஆழ்கடல் மீன்பிடியே உலகத்தில் மிக ஆபாத்தான தொழில்” என ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது
கடல் பயணம் சற்று ஆபத்தானது, அதிலும் மீன்பிடிக்காக செல்லும் பயணத்தில் ஆபத்துகள் அதிகம் என்றே சொல்லலாம். காரணம் மீன்பிடி உபகரணங்கள் மற்றும் இதர பொருட்களும் நம்மோடு சேர்ந்தே படகில் பயணிக்கிறது, பொருட்கள் கூடக்கூட ஆபத்துகளும் கூடிக்கொண்டே செல்கிறது . கடற்றொழிலில் உள்ள ஆபத்துகளை அறிந்துகொண்டால் அவைகளை எதிர்கொள்வது எளிதாக இருக்கும், முழுமையாக தடுக்க முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் எதிர்கொள்ளும் வழிமுறைகளையாவது வகுத்து வைத்துக்கொள்ள முடியும்.
அபாயங்கள் அல்லது ஆபாத்துக்கள் என்பது உலகில் உள்ள எல்லா விடயங்களிலும் கலந்து காணப்படுகிறது அதனால் கடற்றொழில் என்பது விதிவிலக்கல்ல. எனவே இத்தொழிலோடு சம்பந்தப்பட்ட சில ஆபத்துகளை பார்ப்போம்
- Biological – உயிரியல் தொடர்பானவைகள் : நாம் பிடிக்கும் மீனின் மூலம் தோற்றுவிக்கக்கூடிய ஆபத்துகளாக இறந்த மீனின் மூலம் எட்டப்படும் ஒவ்வாமைகள், அல்லது மீனின் முள் தாக்குதல் (திருக்கை முள், ஓரா முள்) இது போன்ற மீன் இனத்தின் மூலம் ஏட்படும் ஆபத்துகள்.
- Chemical – இரசாயன மூலம் : நமது படகில் இருக்கும் இரசாயன பொருட்கள் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) இருந்தும் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன், படகில் இருக்கும் மண்ணெண்ணெய், காஸ் (Gas) மற்றும் சமையல் எரிபொருட்கள்).
- Environmental – சுற்றுச்சூழல் சார்ந்தவர்கள் – அதிகூடிய சூரிய ஒளி கண்களையும் உடலையும் கதிர்களைக்கொண்டு பாதிக்கலாம், காற்று மாறுதல், சூறாவளி உருவாக்குதல், கடல் அமுக்கம் ஏட்படல், வெள்ளப்பெருக்கம் , இடியுடன் மலை மற்றும் காற்று, நீர் குளிராக்குதல், இயந்திரம் பழுதடைதல், படகு கட்டுப்பாட்டை இழத்தல் போன்ற இன்னும் பல விடயங்களை குறிப்பிடலாம். அதே போன்று சறுக்குதல் / தவறுதல் / வீழ்தல் (Slips, Trips and Falls) போன்றவைகளையும் சேர்க்க முடியும்.
- Equipment / Machinery – தொழில் உபகரணங்கள் : நாம் படகில் கொண்டு செல்லும் உபகரணங்கள் எப்படியான ஆபத்துகளை தோற்றுவிக்கும் என்ற சரியான கணிப்பும் அதனை கையாள முறையான வழிமுறைகளும் படகில் பயணிக்கும் எல்லோருக்கும் இருக்க வேண்டும்