அன்பார்ந்த உறவுகளே !
கடற்றொழில் எம்மில் பலருக்கு பிரதான தொழிலாக திகழ்கிறது, நமது குடும்ப வறுமையை ஈடு செய்ய கடலை நாம் நாடி இருக்கிறோம், ஆபத்துகள் நிறைந்து இருந்தும் குடும்பத்துக்காகவே நம்மை அர்ப்பணித்து இந்தத்தொழில் ஈடுபடுகிறோம். தயவு செய்து இன்னுமொரு உயிரை இழந்து விடக்கூடாது என்பதட்காக நாம் என்ன செய்யலாம் என்று சிந்தித்து செயட்பட வேண்டிய நேரத்தில் இருக்கிறோம் என்பதை நாம் எல்லோரும் நற்றாக உணர்ந்திருக்கிறோம் !!
“சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம்” என்று சொல்வார்கள், நாம் எல்லோரும் ஆரோக்கியமாக இருந்தால் தான் நமது குடும்பத்தை காப்பாற்ற முடியும், உயிரை இழந்து உழைக்க வேண்டாம்!! இதுவரை கடற்றொழில் நடந்த எத்தனையோ கொடூர நிகழ்வுகள் எம்மை கதற வைக்கிறது, தயவு செய்து நாம் எல்லோரும் கடற்றொழிலில் இருக்கும் ஆபத்துகளை இனம் கண்டு அவைகளை எவ்வாறு எதிர்கொள்ள முடியும் அல்லது ஆபாத்துக்களை எப்படி குறைக்க முடியும் என்று இனம்கண்டு அவைகளை நடைமுறைப்படுத்த முன்வாருங்கள், எம்மால் முடியுமான சகல உதவிகளையும் வழங்க தயாராக உள்ளோம் !!