அந்தமான் கடல் பிராந்தியத்தின் வடக்கு வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் 72 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாறும் அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனால் நாளை தொடக்கம் மறுஅறிவித்தல் வரை இந்தக் கடற் பிரதேசத்தில் கடற்றொழில் நடவடிக்கைகளில் அல்லது கடல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த பிரதேசத்தில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்வோர் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது
(Government news)