மியன்மாரில் கடந்த மாதம் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
அப்போது முதல் மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக தினம்தோறும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை தடுப்பதற்காக ராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.
இராணுவம் மக்களைப் பாதுகாக்கும் என்றும் ஜனநாயகத்திற்காக பாடுபடும் என்றும் கூறிய ஜெனெரல் மின் ஆங் ஹேலிங் கூறினார்.
அவர் கூறிய மறுநாளே அவரின் கூற்றுக்கு முரண்பாடாக இந்த மிருகத்தனமான தாக்குதல் நடந்து உள்ளது.
நேற்று ஒரே நாளில் 114 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து மியன்மாரின் ஆயுதப்படை தினமான நேற்று உண்மையில் “வெட்கக்கேடான நாள்” என்று பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்களால் உருவாக்கப்பட்ட போராட்டக் குழுவான சிஆர்பிஎச் ன் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.