இன்று உலகம் முழுவதும் பரவலாக பேசப்படும் முதலீடுகளில் பிட்காயினும் ஒன்று. அதிலும் தற்போது சர்வதேச சந்தையில் மிக பலராலும் விரும்பப்படும் முதலீடாக பிட்காயின் உருவெடுத்து வருகிறது. சமீப காலமாக அவ்வப்போது புதிய உச்சத்தினை தொடுவதும், பலத்த சரிவினையும் காண முடிகிறது.

இது முதலீட்டாளர்கள் மத்தியில் சற்று குழப்பத்தினை ஏற்படுத்தினாலும், தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

அமெரிக்க முதலீட்டாளர்களின் ஆர்வத்திற்கு மத்தியில், பல சர்வதேச நாடுகளும் தற்போது பிட்காயின் பக்கம் திரும்பியுள்ளன.

பிட்காயின் விலை அதிகரிக்கலாம்

இதற்கிடையில் நிபுணர்களும் இந்த பிட்காயின் விலையானது அதிகரிக்கும் என்றே கூறி வருகின்றனர். ஏனெனில் பிட்காயின் தேவை அதிகரிக்கும். இதனால் முதலீட்டாளர்கள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் தான் பல்வேறு நிபுணர்களும் பிட்காயின் குறித்து சாதகமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி 21 அன்று பிட்காயின் மதிப்பு 58,000 டாலர்களை தொட்டது. பிகாயினில் பல ஆயிரக்கணக்கான முதலீடுகள் அதிகரித்த நிலையில், இது அதிகப்படியான அளவு வாங்கப்பட்டு விட்டதாக சமீபத்தில், அமெரிக்காவினை அடிப்படையாகக் கொண்ட கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ன் கிராகன் கடந்த மாதம் கூறியது. எனினும் இந்த விலை அதிகரிப்பு முடிவதற்குள் பிட்காயின் மதிப்பானது அதிகமாக உயரக்கூடும்.

இது வரவிருக்கும் மாதங்களில் 75,000 டாலர்களை தாண்டினால், அதன் சுழற்சியின் உச்சியில் இருக்கும் என்றும் கிராகன் கூறியுள்ளது. கடந்த பிப்ரவரி 21 நிலவரப்படி பிட்காயின் மதிப்பானது 58,000 டாலர்களை தொட்டது. இது மற்ற கிரிப்டோ நாணயங்களுடன் ஒப்பிடும்போது 37% அதிகமாக இருந்தது. இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி 66% அதிகரித்து, 48,912 டாலர்களாக வர்த்தகமாகியுள்ளது.

இதே கடந்த வாரம் கிராகனின் தலைமை செயல் அதிகாரியான ஜெஸ்ஸி பவல் இந்த வார தொடக்கத்தில், ப்ளூம்பெர்கிடம் பிட்காயின் மதிப்பு அடுத்த தசாப்தத்திற்குள் 1 மில்லியன் டாலரை எட்டும் என நான் எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.

இவர் மட்டும் அல்ல, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிபுணர்களும் பிட்காயின் மதிப்பு அதிகரிக்கும் என்றே கூறுகின்றனர்.

சமீபத்தில் டெஸ்லா இன்க் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், பிட்காயினில் 1.5 பில்லியன் டாலர் முதலீட்டினை செய்தார். இந்த நிலையில் பற்றிய சாதகமான செய்திகள் அவருக்கு இன்னும் நல்ல லாபத்தினையே கொடுக்கலாம்.

சமீபத்தில் டெஸ்லாவின் பங்கு விலைகள் கூட, பிட்காயின் மதிப்பு குறைந்தபோது வீழ்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது.

By : good return Tamil news

By Admin

Leave a Reply