ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதனால் மலை அடிவாரத்தில் இருந்த கிராம மக்கள் பலர் இந்த பனிச்சரிவில் சிக்கி கொண்டனர்.
பனிச்சரிவில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படுகாயங்களுடன் 5 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டனர்.
இதனிடையே இந்த பனிச்சரிவில் சிக்கி பலர் மாயமானதாக தெரிகிறது.
இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இருப்பினும் மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.