கொரோனா வைரஸ் உலகுக்கு இன்னும் அச்சுறுத்தலாகவே அமைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் இருப்பதாவது:- கடந்த வாரத்தில் 26 லட்சத்துக்கும் அதிகமான புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 7 சதவீத உயர்வு ஆகும். 6 வார காலம் சரிவை சந்தித்து வந்த கொரோனா பாதிப்பு இப்போது ஏற்றத்தை சந்தித்துள்ளது.

பொது சுகாதார, சமூக கட்டுப்பாடுகள் தளர்வு உள்ளிட்ட பல காரணங்களால்தான் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply