திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள நிலாவெளி,இரக்ககண்டி,கும்புருப்பிட்டி,குச்சவெளி பிரதேசங்களில் இம்முறை அதிகமாக சின்ன வெங்காயம் பயிரிடப்பட்ட இந்த நிலையில் திடீரேன சின்ன வெங்காயத்தின் விலை சரிவால் வெங்காயப் பயிற்ச்செய்கை விவசாய்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த மாதம் நடுப்பகுதியில் கிலோ ஒன்றிற்க்கு சுமார் 400ரூ.தொடக்கம் 550ரூ. சென்ற வெங்காயம் தற்ப்போது 150/=,200/= ரூபாய்க்கே விவசாய்களிடம் இருந்து வாங்கப்படுகின்றது. கொள்வனவாளர்களிடம் இது தொடர்பில் நாம் வினவியபோது வெங்காயத்தின் அதிகளவான இறக்குமதியே இந்த திடீர் விலைச்சரிவுக்கு காரணம் என குறிப்பிட்டனர். விவசாயத்தை நம்பிவாழும் இந்த பகுதி மக்களுக்கு இந்த முறை பாரியதொரு நஷ்டத்தை தாம் சந்தித்திருப்பதாக எமக்கு தெரிவித்தனர்.
நீங்க விலைய கூட்டினா நாங்க வாங்கி தின்றது எப்புடி?😜😜😜😜