இளம் தொழில் முனைவோருக்காண காணி வழங்கும் நேர்முகத்தேர்வுகள் கடந்த வாரம் சில விண்ணப்பதாரர்களுக்கு நடந்து முடிந்த நிலையில் குச்சவெளி பிரதேச சபைக்குட்ப்பட்ட இளம் தொழில் முனைவோர் அதிகமானவர்கள் விண்ணப்பித்திருக்கும் நிலையில் அவர்களுக்கான நேர்முகத்தேர்வு அழைப்புக்கடிதம் வரவில்லையென அதிகமான இளைஞர்,யுவதிகள் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தனர் இது தொடர்பில் மேலும் அவர்கள் கூறுகையில் இளம் தொழில் முனைவோருக்கான விண்ணப்பங்கள் காடந்த சில மாதங்களுக்கு முன்பாக குச்சவெளி பிரதேச செயலகத்தினூடாக விண்ணப்பித்திருந்தோம் ஆனால் சிலருக்கே நேர் முகத்தேர்வுக்கான அழைப்புக்கடிதம் கிடைக்கெப்பெற்றுள்ளது அதற்க்கான நேர்முகத்தேர்வு கடந்த 26 ஆம் திகதி நடைபெற்றுள்ளது ஆனால் அதிகமான விண்ணப்பதாரர்களுக்கு இன்னும் கடிதம் கிடைக்கப் பெறவில்லை என கவலை வெளியிட்டனர். Share this:TwitterFacebookWhatsAppLike this:Like Loading... Related Post navigation பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக சிசு செரிய பஸ் சேவை. ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்களை கோருமாறு உத்தரவு…!