ஜனாஸா அடக்கம் வர்த்தமானி அறிவித்தலை அடுத்து அதனை மிக விமர்சையாக கொண்டாடுவதும், சமூக வலைத்தளங்களில் பரப்புவதும் அதிகமாக காணக்கிடைத்தது.
இதுவரை 350 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள், பலவந்தமாக எரிக்கப்பட்டுள்ளன..!!!
கொரோனா தொற்றினால் மரணித்ததாக குறிப்பிட்டு, இலங்கையில் இதுவரை 350 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள், பலவந்தமாக எரிக்கப்பட்டுள்ளன என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் மேலும் கூறியதாவது.
சர்வதேச அழுத்தம் காரணமாகவே, இலங்கை அரசாங்கம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யலாமென தற்போது அறிவித்துள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளதற்காக யாரும் அதை கொண்டாடத் தேவையில்லை. நிபுந்தனையுடன்தான் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எங்கள் உரிமையை அபகரித்துவிட்டு அதனையே மீழ தற்போது தந்துள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 459 ஐ தான்டிய நிலையில்..
இதில் 350 தொடக்கம் 380 க்கும் இடையிலான முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலவந்தமாக எரிக்கப்பட்டுள்ளன என்ற தகவலும், கிடைத்துள்ளதாக அசாத் சாலி மேலும் தெரிவித்தார்.