வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் அனைவரும் விமான நிலையத்திலேயே பி.சீ.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும், 14 நாட்கள் தமது வீடுகளிலும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கான தனிமைப்படுத்தலுக்கான நாட்கள் 28 இல் இருந்து 14 ஆக குறைக்கப்பட உள்ளதாகாகவும் இது தொடர்பிலான அறிவிப்பு இன்று (11) சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் விடுக்கப்பட இருப்பதாகவும் கொவிட் – 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
புதிய முறைகளுக்கு அமைவாக வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருவோர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்படும் பி.சீ.ஆர். பரிசோதனையில் அவர் கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மீண்டும் வீட்டுக்கு சென்று 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுவதை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
By: Lanka government news