இந்தோனேசியாவில் வீட்டிற்குள் விழுந்த விண்கல்லால் ஒருவர் கோடீஸ்வரராக மாறியிருக்கிறார். 

இந்தோனேசியாவில் விண்கல் ஒன்று, தகரத்தாலான வீட்டுகூரையை பிய்த்துக்கொண்டு வீட்டிற்குள் வந்து விழுந்தது. இது சுமார் 2.1 கிலோகிராம் எடை கொண்டது. இந்த விண்கல் வீட்டினுள் 15 சென்டிமீட்டர் ஆழம் வரை பாய்ந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த வீடு மிகவும் சேதமடைந்துள்ளது. ஆனால் அதனை நினைத்து குடும்பத்தினர் வருத்தப்படாத அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஏனென்றால் அந்த விண்கல் ரூ.10 கோடி மதிப்பு கொண்டது. அதன் எடை மற்றும் தரத்தின் அடிப்படையில் அதன் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரிதான வகையை சேர்ந்த இந்த விண்கல்லால் 33 வயதே ஆகும் ஜோசுவா எனும் இந்தோனேசியர் ஒரு நாள் இரவிலேயே கோடீஸ்வரராக மாறியுள்ளார். சவப்பெட்டி செய்யும் தொழிலை செய்து வரும் இவருக்கு, இந்த விண்கல் அவரது 30 வருட சம்பாத்தியத்தை கொடுத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

By Admin

Leave a Reply