உலகளாவிய ரீதியில் பல இடங்களில் பல மனிதர்களின் உயிர்களை எடுத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு பல்வேறு ஆய்வுகளை உலகளவில் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் இந்த கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத நுண்கிருமியை, முதன் முதலாக தோற்றுவித்தது சீனா தான்.

இந்த கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகள், ஏற்றுமதி இறக்குமதியினை மட்டும் நம்பியிருக்க முடியாது என்று மாற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவே அதனை தெரிவித்துள்ளது தான் மிகப்பெரிய ஆச்சரியமே. தொழில்துறை மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சுயகட்டுப்பாட்டுடன் கூடிய பாதுகாப்பான மற்றும் நம்பகமான உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோக முறையை உருவாக்க வேண்டும் என்று சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You missed