பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன், கார் விபத்தில் காயமின்றி தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக, போரீஸ் ஜான்சன் உள்ளார். பார்லி.,யில், இன்று(ஜூன் 17) நடந்த கூட்டத்தில் பங்கேற்ற பின், போரீஸ் ஜான்சன், அங்கிருந்து காரில் புறப்பட்டார். அப்போது, ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர், பிரதமரின் காரை நோக்கி ஓடி வந்தார். அவரை தடுக்கும் முயற்சியில், பிரதமரின் பாதுகாப்பு வாகனங்களில் வந்தவர்கள் முயற்சித்தனர்.

அப்போது, பாதுகாப்பு வாகனம் ஒன்று, பிரதமரின் கார் மீது மோதியது. எனினும், பிரதமரின் காருக்கு எதுவும் நேரவில்லை. பிரதமரும் காயமின்றி தப்பினார். ஆர்ப்பாட்டக்காரரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

By Admin

Leave a Reply