கொரோனா (Coronavirus) பெருந்தொற்றை வெற்றி கொண்டதை அடுத்து திங்கள் முதல் அனைத்து வணிகம் சார்ந்த செயல்பாட்டை ஆரம்பிக்கும் என பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் அறிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் நேற்று இரவு தொலைக்காட்சியில் உறையாற்றுகையில்:-
கொரோனா பெருந்தொற்றை வெற்றி கொண்டதை அடுத்து திங்கள் முதல் அனைத்து வணிகம் சார்ந்த விடயங்களும் செயல்பாட்டிற்கு வரும், அதில் பார்கள், உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் ஆகியவற்றிற்கான அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருகிறது. எதிர்வரும் 22 ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சிறுவர் பள்ளிகள் என அனைத்தும் கட்டாயமாக செயற்பாட்டிற்கு வர உள்ளது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரையான நாட்டின் கொரோனா இறப்பு எண்ணிக்கை 243 ஆக குறைந்துள்ளது. முந்தைய வாரம் இந்த எண்ணிக்கையானது 353 என இருந்தது. திங்கட்கிழமை முதல் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளோம். பொது போக்குவரத்தை பயன்படுத்துவோர் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், முகக்கவசம் பயன்படுத்துவதும் ஊக்குவிக்கப்படும்.
திங்கட்கிழமை முதல் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே பயணிக்க முடியும். ஜூலை 1 ஆம் தேதி முதல் ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியே கொரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்த நாடுகளுக்கும் பயணப்பட முடியும் என கூறினார்.

By Admin

Leave a Reply