கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு வேளைகளில் கொள்ளை முயற்சிகள் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பரைக்கோடு பகுதியில் நடந்துவந்தன.

இதுகுறித்து மக்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். போலீஸார் முதற்கட்டமாக அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சோதனைசெய்தனர்.

அந்த கேமராவில் பதிவான தகவலின் படி இளைஞன் ஒருவன் வீடுகளின் சுவர் ஏறிக் குதித்து, ஒவ்வொரு வீடாகச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை பரைக்கோடு பகுதியில் உள்ள ஆளில்லாத ஒரு வீட்டின் மொட்டை மாடியில் யாரோ குறட்டைவிட்டு தூங்கும் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது இளைஞர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார். பொதுமக்கள் திருடன் என சத்தம்போட்டு கத்தினர். இதனால் தூங்கிக்கொண்டிருந்தவர் எழுந்து சுவர் ஏறிக் குதித்து தப்பியோட முயற்சி செய்த போது பொதுமக்கள் அவரை துரத்திப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

அவன்தான் அந்த கேமராவில் பதிவானவன் என்று உறுதியானது. அவனை சிறையில் அடைத்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply