பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கியதால், கொரோனா தொற்று பரவல் 45 சதவீதம் அளவுக்கு குறைந்ததாக புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ஜெர்மனியில் கடந்த ஏப்ரல் மாதம் பொது இடங்கள் மற்றும் கடைகளுக்கு செல்வோர் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது அதே போன்று பல நாடுகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது இதனால் ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்தனர். இதில், அடுத்த 20 நாள்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அன்னளவாக அடுத்த 2 மாதங்களில் 45 சதவீதமாக குறைந்துள்ளது. முகக்கவசம் அணிவது கொரோனா பாதிப்பை வெகுவாக குறைத்துள்ளதற்கு, வலுவான மற்றும் உறுதியான புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் மக்கள் இது தொடர்பில் உலகலாவிய ரீதியில் கவனம் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply