ஜேர்மன் அரசாங்கத்திடமிருந்து 11 மில்லியன் யூரோ தொழில்நுட்ப நிதி உதவியை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்தினால் கீழ் கண்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இன்று உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டுள்ளது.

1 . தொழில் பயிற்சித் திட்டம் – 7 மில்லியன் யூரோ இளைஞர்களுக்காக அவர்களின் கோரிக்கைக்கு அடிப்படையிலான தொழில் பயிற்சியை வழங்குவதே இந்த திட்டத்தின் எதிர்பார்ப்பாகும்.

2 . சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை அபிவிருத்தித் திட்டம் – 3.5 மில்லியன் யூரோ இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கு சர்வதேச சந்iதையில் நிலவும் போட்டித்தன்மைக்கு ஈடுகொடுக்கக்கூடிய வசதிகளை செய்துகொடுப்பதற்கு இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
 3. கல்வி மற்றும் மேலாண்மை நிபுணத்துவ நிதி– 0.5 மில்லியன் யூரோ புதிய திட்டங்களை வகுக்கும்போது தேவையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், சிறிய அளவிலான திட்டத்திற்கு நிதியை ஒதுக்குவதற்கும், ஜேர்மன் நிபுணர்களின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.

மேலே குறிப்பிடப்பட்ட திட்டங்கள் GIZ நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும். தொழில் பயிற்சி மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான துறைகளின் அபிவிருத்திக்காக இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு பல வழிகளில் பங்களிப்பு செய்து தொழில் நுட்பம் மற்றும் நிதி உதவிகளை வழங்கி ஜேர்மன் அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கிவருகிறது.

மேற்படி விடயங்களுக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று நிதி மற்றும் கொள்ளை அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றது. நிதி அமைச்சின் செயலாளர், திரு.எஸ்.ஆர்.ஆடிகல இலங்கையின் சார்பிலும் இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதுவர் திரு.ஜோன் ரோட் (Mr. Jorn Rohde) ஜேர்மன் அரசாங்கத்தின் சார்பிலும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. அஜித் அபேசேகர மற்றும் GIZ நிறுவனத்தின் இலங்கைகான பிரதிநிதி திருமதி. கிறிஸ்டின் இயன்வ்ல்ட் (Christiane Einfeldt) ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

By : Lanka government news

By Admin

Leave a Reply

You missed

15 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் – மாணவர்கள் உட்பட 7 பேர் கைது..!
————————————————————————

பதினைந்து வயது சிறுமியை (மாணவியை) கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், மாணவியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவனோடு 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், மாணவியுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மாணவி, டியூஷன் வகுப்பில் கலந்துகொள்வதாகக் கூறிவிட்டு, தனது காதலனான பாடசாலை மாணவனை சந்திக்கச் சென்றுள்ளார்.

அப்போது, சந்தேக நபரின் காதலன் என்று கூறிக்கொண்ட மாணவன், தனது நண்பர் ஒருவர் வசித்து வந்த ஹோமாகம பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு குறித்த மாணவியை அழைத்துச் சென்று, அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதன்படி, விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான ஆறு மணி நேரத்திற்குள் வேறு மூன்று வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவனான காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த, அதே பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவர்.

கைதானவர்களில் ஐந்து பேர் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், மற்ற இருவர் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பாடசாலை மாணவியை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.