இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் பல நாட்களாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் தற்காலிகமாக ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

மீண்டும் மே மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

மேலும் ஜூன் மாதம் 4ஆம் 5ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

மேலும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நள்ளிரவு 12 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரும் வரை அமுல்படுத்தப்படும்.

கொழும்பு கம்பஹா ஆகிய மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களுக்கு போக்குவரத்து அனுமதி அளிக்கப்படும்.

Leave a Reply