உலகளவில் கொரோனா வைரஸ் காரணமாக பல உயிர் பலிகள் நடந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் பிள்ளைகளும் பிறந்து வருகிறார்கள்.

இந்த கொரோனா வைரஸ் சந்தர்ப்பத்தில் இந்தியாவில் மீரட்
நகரின் மோதிபுரம் பகுதியில் ஒரு தம்பதியினர் இரட்டைக் குழந்தைகள் பெற்றுள்ளார்கள்.

அந்த இரண்டு குழந்தைகளுக்கும் குவாரண்டைன் மற்றும் சானிட்டைசர் என்று பெயர் வைத்துள்ளார்கள்.

அவர்கள் இந்த பெயருக்கான காரணத்தை கூறுகையில்: கொரோனா வைரஸுக்கு எதிராக இந்த இரண்டும் மனிதர்களுக்கு பாதுகாப்பு தரும் முக்கிய விஷயங்களாகும். அதனால்தான் இந்த பெயரையே சூட்டியுள்ளோம்.

மேலும் இது வாழ்நாள் முழுதும் மனிதர்களின் பாதுகாப்பு. எனவே இதுதான் சிறந்த பெயர்களாக இருக்க முடியும் என்று எங்கள் குழந்தைகளுக்கு இவற்றைத் தேர்வு செய்தோம்.

Leave a Reply