நாட்டை மிகவும் அச்சுறுத்தி வருகின்ற Covid-19 என்கின்ற கொரோனா வைரசின் தாக்கத்தினால் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது இதனால் நாட்டின் பொருளாதாரம் முடக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் வாழ்வாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கண்ணியமிக்க உலமாக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் A.முபாரக் அவர்களின் தலைமையில் 24.04.2020 திகதி புனித ரமழான் மாதத்தின் தலைப்பிறை நாளான இன்று புல்மோட்டையிலுள்ள கண்ணியமிக்க உலமாக்களுக்கான உணவுப் பொருட்கள் தவிசாளர் அவர்களின் சொந்த நிதியிலிருந்து வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் கௌரவ S.A.C.M.நசார் ,பொதுச் சுகாதார பரிசோதகர், பாதுகாப்பு படைத் தளபதிகள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply