உலக நாடுகளின் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் உலகில் வேறெங்கும் காணமுடியாத அளவிற்கு அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் பாதித்தவர்கள் 704,000 தை தான்டியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40,000 தை தான்டியுள்ளது.
இதன் காரணமாக அண்டை நாடான கனடாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,383 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,470ஆக உள்ளது.
இந்த வைரஸின் தாக்கம் காரணமாக மக்கள் நலனுக்காக அமெரிக்கா, கனடா எல்லைப் பகுதி சாலைகள் இன்னும் 30 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் சாலைகள் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.