இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் எல்லா அரசாங்க, தனியார் சேவைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. இதனை ஏப்ரல் 20ம் திகதிக்குப் பின்னர் மீள் ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த மாதம் 20ம் திகதி இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 5,000பஸ்கள், 400 ரயில் சேவைகளை பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக , போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் கடமைக்கு சமூகமளிக்கும் ஊழியர்கள் அனைவருக்கும் தேவையான முகக்கவசங்களை வழங்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் இந்த சேவைகள் நடவடிக்கை கட்டம் கட்டமாக முன்னெடுத்து வழமைக்கு கொண்டு வர அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

Leave a Reply