இந்தியாவில் “ரயில் ரோகோ” போராட்டத்தில் கடந்த பெப்ரவரி மாதம் பா.ஜ முன்னாள் எம்.பி., சோம் மரந்தி உற்பட 5பேர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் ஜாமின் கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசாங்கம் பல விதமான வழிமுறைகளை முன்னெடுத்து வருகின்றது. இந்தவகையில் இந்தியாவில் கொரோனா தடுப்பு பணிகளுக்காகவும், அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற நோக்குடனும் “பிரதமர் நிவாரண நிதி”யை மத்திய அரசு அமைத்தது. அதேபோல் கொரோனா பாதித்தவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், முன்னெச்சரிக்கை குறித்து தெரிந்து கொள்வதற்காக “ஆரோக்கியா செயலி” யை அறிமுகப்படுத்தியது.
ஜாமின் கேட்டவர்களின் வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி அனுபா ராவத் சவுத்ரி வீடியோ கோன்பிரன்ஸ் மூலம் வழக்கை விசாரித்து நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கினார்:
- குற்றம் சாட்டப்பட்ட 6பேர்களும் ஒவ்வொருவரும் “பிரதமர் நிவாரண நிதி” க்கு 35,000 நன்கொடை அளிக்க வேண்டும்.
- ஒவ்வொருவரும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள “ஆரோக்கியா செயலி” யை தரையிறக்கம் செய்ய வேண்டும்.