உலகெங்கும் பரவிக் காணப்படும் கொரோனா வைரஸினால் பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,000ஐ தாண்டி உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 135 ஆகும். சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,765 ஆகும்.
பாகிஸ்தானில் கொரோனா வைரஸினால் மக்களை பாதுகாக்கும் நோக்கில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இன்னும் சில நாட்களில் புனித ரம்ஜான் (Ramzan) மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு நோற்க இருக்கிறார்கள்.
நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் என்.சி.ஓ.சி. எனப்படும் தேசிய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகளுடன் கொரோனா வைரஸ் பரவுவதை எப்படி தடுத்துக் கொள்ளலாம் என்றும் ரம்ஜான் மாதத்தை எப்படி கையாள்வது தொடர்பாகவும் கலந்துரையாடினார்.