கொரோனா வைரஸ் காரணமாக வாகனங்களில் செல்பவர்கள் தமது கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதற்காக செனிடைசர்களை (sanitizer) வைத்துக் கொள்ளுமாறு கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் உள்துறை அமைச்சின் முக்கியமான அறிவிப்பு பின்வருமாறு: செனிடைஸர்களை வாகனங்களில் எடுத்துச் செல்பவர்கள், வாகனங்களை விட்டு வெளியே செல்லும் போது செனிடைஸர்களை கையோடு எடுத்துச் செல்லும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கத்தாரில் அதிக உஷ்ணம் காரணமாக வாகனங்களில் செனிடைஸர்களை விட்டு செல்வதின் காரணமாக தீ விபத்து ஏற்படக்கூடிய அதிக வாய்ப்பு உள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.