இப்பொழுது உலக மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் அனைத்து இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் சில இடங்களில் மக்கள் அரசாங்க சட்டத்தை மதித்து வீட்டிலேயே இருக்கிறார்கள். யாரெல்லாம் அரசாங்க சட்டத்தை மதித்து இருக்கிறார்களோ அவர்களை இறைவன் கொடிய நோய்த் தொற்றுலிருந்து பாதுகாப்பானாக!
இலங்கை நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:
இந்த வருடம் தமிழ், சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை எச்சரிக்கையாக தெரிவிக்க வேண்டிய நிலையில் எல்லோரும் இருக்கின்றோம்.
மேலும் இவ்வருட புத்தாண்டை சுகாதாரத்துறையின் பரிந்துரைக்கேற்ப, நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் சட்டத்தை கருத்தில் கொண்டு புத்தாண்டு விஷேசங்களை அனுஷ்டிக்குமாறு வேண்டுகிறேன்.
மேலும் புதுவருடத்தை எளிமையாக உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் இணைந்து கொண்டாடுமாறு அனைவரையும் தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.