உலகெங்கும் பரவிக் கொண்டே இருக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் பல நடவடிக்கைகளை அந்தந்த நாட்டு அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் கூகுள் (Google), ஆப்பிள்(Apple) ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து ஒரு செயலியை உருவாக்கி வருவதாக கூகுள் நிறுவனத்தின் சிஇஓ C.E.O சுந்தர் பிச்சை தனது டுவிட்டர் (Twitter) பக்கத்தில் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார்.

இந்த செயலியை ப்ளூடூத் (Bluetooth) தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல் பட்டு வருவதாக என்றும் பகிர்ந்துள்ளார்.

இச் செயலியானது நமக்கு அருகாமையில் யாரேனும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர் சென்று வந்த இடங்கள் குறித்து நமக்கு எச்சரிக்கை அனுப்பும் வகையிலான செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், நிச்சயம் இதில் தனிநபர் சுதந்திரம் பாதிக்காத வகையில் கண்காணிக்கப்படும் என்றும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இச் செயலியானது கொரோனா வைரஸை தடுப்பதற்கு அரசுக்கும், சுகாதார அமைச்சுக்கும் உதவும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply