உலகெங்கும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதனை மீறுபவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இலங்கையிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் சிலர்கள் இதனை மீறுகின்றனர். இது கடும் வேதனையாக இருக்கின்றது.
கடந்த 19ம் திகதியில் இருந்து இன்று வரை 19ஆயிரம் பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இன்று மாத்திரம் 700பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்கள் நாளை முதல் 14நாட்கள் தனிமைப்படுத்தும் முகாம்களில் வைக்கப்படுவார்கள் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.