கோவிட்-19 தொடர்பாக வாட்ஸ்அப்பில் வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு புதிய நிபந்தனைகளை கொண்டு வந்துள்ளது WhatsApp நிறுவனம் !
சமூகவலையத்தளத்தில் பரவும் பொய்யான தகவல்கள் வாட்சப் குரூப்களின் மூலம் மிக வேகமான பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் பல மாற்றங்களை வாட்சப் நிறுவனம் தொடர்ந்தும் மேட்கொண்டு வருகிறது. நம்மிடம் வரும் தகல்வலை உண்மையானதா என எப்படி உறுதி செய்வது என்பது தொடர்பாக ஏற்கனவே KVC ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனை இங்கே காண முடியும்
தொடர்ச்சியாக முயட்சி செய்துவரும் வாட்சப் நிறுவனம் தற்போழுது ஒரே சமயத்தில் வதந்திகளை பலருக்கும் பரப்புவதை தடுக்கும் நோக்கில் 5 பேருக்கு மட்டும் ஒரு தகவல் (வீடியோ, ஆடியோ, செய்திகள்) போர்வார்ட் செய்யும் முறையை அறிமுகம் செய்திருந்தது. இதனால் வதந்திகள் 25% சதவீதால் குறைந்துள்ளது.
தற்போழுது உலகில் நிலவும் கொரோனா வைரஸ் தாக்கத்தை வைத்து பரப்பப்படும் வதந்திகளை மட்டுப்படுத்திடும் நோக்கில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இனிமேல் வீடியோ, படம், செய்தி உள்ளிட்ட எந்த தகவலாக இருந்தாலும் ஏற்கெனவே 5 முறை அல்லது அதற்கும் அதிகமான முறை போர்வார்ட் செய்யப்பட்டிருந்தால் அவற்றை நாம் ஒருவருக்கு மட்டுமே போர்வார்ட் செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதைவிட இன்னும் ஒரு சிறப்பான விடயம் என்னவெனில், நம்மிடம் வரும் வாட்சப் தகவல் போர்வார்ட் செய்யப்பட்டு வந்தால் அது எத்தனை பேரிடமிருந்து போர்வார்ட் செய்யப்பட்டு நம்மிடம் வந்துள்ளது என்ற எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வசதி மிக விரைவில் வெளிவரவுள்ளது.
அனைத்து தகவல்களையும் பிறருக்கு அனுப்பமுன் ஒரு முறை மறுபரிசீலனை செய்து நாம் உறுதிப்படுத்திக்கொள்ளாத வரை போலியான தகவல் பரிமாற்றத்தை தடுப்பது ஒரு போதும் நிறைவேறாது