கிராமசேவகர்களின் நடவடிக்கைகள் குறித்த கண்காணிப்பு நடவடிக்கையை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் விசாரணைக் குழு நேற்று ஆரம்பித்தது. நேற்று நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் பல கிராமசேவகர்கள் சிக்கியுள்ளனர்

அமைச்சின் கண்காணிப்பு குழு நேற்று முதற்கட்டமாக கொழும்பில் ஒரு பாரிய கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது, 200 க்கும் மேற்பட்ட கிராம சேவகர் அலுவலகங்களில் அவர்கள் திடீர் கண்காணிப்பை மேற்கொண்டனர்.

கிராமசேவர்கள் தங்கள் கடமைகளை திறம்படச் செய்கிறார்களா அல்லது பொது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறார்களா என்பதைக் கவனத்தில் கொள்ள இந்த சோதனை நடத்தப்பட்டது.

நேற்று காலை 8.30 மணியளவில், இந்த குழு கொழும்பு மாலிகாவத்த, கொழும்பு கிழக்கு மற்றும் கெத்தாரம மேற்கு பகுதிகளில் உள்ள கிராமசேவகர் அலுவலகங்களிற்கு இந்த குழு சென்றது.

பல கிராம சேவகர் அலுவலகங்களில் மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்தாலும், கிராம சேவககர்கள் அங்கு வரவில்லை என்பதைக் கண்டறிந்தனர். காலை 9.30 க்குப் பிறகு மட்டுமே அவர்களின் அலுவலகங்களுக்கு வந்திருந்தது. இருப்பினும், காலை 11.00 மணிக்கும் அலுவலகங்களிற்கு வராத கிராமசேவகர்களும் அடையாளம் காணப்பட்டனர்.

பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் மற்றும் அவர்களின் பொறுப்புகளை மீறும் இந்த கிராம சேவக அதிகாரிகள் தொடர்பான அறிக்கையை இந்த சிறப்பு குழு தொகுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை பொது நிர்வாக அமைச்சக செயலாளரிடம் ஒப்படைக்கப்படும். அதன்பிறகு, இதுபோன்ற தவறான கிராம சேவகர்கள் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சான்றிதழ்கள் மற்றும் பிற தேவைகளைப் பெற வந்த பலர் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிட்டது. சில சந்தர்ப்பங்களில், கிராம சேவகர்கள் இல்லாததால் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது ன்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். ஊழலை அரச சேவையிலிருந்து ஒழிப்பதற்கும், மேலும் திறமையான மற்றும் நேர்மையான பொது சேவையை வழங்குவதற்கும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு இது இடையூறை ஏற்படுத்துகிறது என்றார்கள்.

Leave a Reply

You missed

15 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் – மாணவர்கள் உட்பட 7 பேர் கைது..!
————————————————————————

பதினைந்து வயது சிறுமியை (மாணவியை) கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், மாணவியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவனோடு 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், மாணவியுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மாணவி, டியூஷன் வகுப்பில் கலந்துகொள்வதாகக் கூறிவிட்டு, தனது காதலனான பாடசாலை மாணவனை சந்திக்கச் சென்றுள்ளார்.

அப்போது, சந்தேக நபரின் காதலன் என்று கூறிக்கொண்ட மாணவன், தனது நண்பர் ஒருவர் வசித்து வந்த ஹோமாகம பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு குறித்த மாணவியை அழைத்துச் சென்று, அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதன்படி, விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான ஆறு மணி நேரத்திற்குள் வேறு மூன்று வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவனான காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த, அதே பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவர்.

கைதானவர்களில் ஐந்து பேர் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், மற்ற இருவர் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பாடசாலை மாணவியை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.