இலங்கையில் அசாதாரண நிலைமை காரணமாக சகலரும் பல விதமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
அரசாங்கம் சமூர்த்தி பயனாளிகளுக்கு மற்றும் முதியோர்கள் இவ்வாறு வருமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு மாத்திரம் மேலதிகமாக பல கொடுப்பனவுகளை கொடுத்து உதவியது.
அரசாங்கம் இவ்வாறு பல உதவிகளை மேற்கொண்டு வருகின்ற சந்தர்பத்தில் சேமிப்பு வங்கி முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 30.000 ரூபாய் கடன் வழங்கும் முகமாக இலங்கை முன்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசங்க ஸ்ரீ நாத் மற்றும் சேமிப்பு வங்கியின் தலைவர் திருமதி கேசிலா ஜயவர்தன ஆகியோர் இதுதொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.