தற்போது நாட்டினை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்றினால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றாட உணவுகளுக்கு கூட மிகவும் கஷ்டப்படுகின்றனர். அதற்கமைய இக்பால் நகர் ஆக்வத்தை கிராமத்திற்கு தவிசாளர் நேரில் சென்று பார்வையிட்டதிற்கு அமைய அப் பகுதியிலுள்ள குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் இன்று 04.04.2020 ம் திகதி குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் A.முபாரக் அவர்களினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.