குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட புல்மோட்டை முதலாம் வட்டாரத்தில் கைரியா நகர்ப்பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் மற்றும் வறட்சி காரணமாக மக்களுக்கான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக நேற்று 03.04.2020 ம் திகதி மாலை அப்பகுதியில் உள்ள மக்கள் தவிசாளரின் நேரடிக் கவனத்திற்கு கொண்டு சென்றதிற்கு அமைய இன்று 04.04.2020 ம் திகதி குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் A.முபாரக் அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் அப்பகுதிற்கு குடிநீர் தாங்கி பொருத்தப்பட்டு அம் மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது