ஓய்வூதியம் பெறுபவர்களின் ஓய்வூதியத்தை வீடுகளுக்கு சென்று வழங்குவதற்கு தபால் திணைக்ளம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ ஊடாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
ஏப்ரல் மாதத்திற்கான ஓய்வூதிய சம்பளம் உரியவர்களுடைய வீட்டுக்கு சென்று கொடுப்பதற்கான வேலைத்திட்டம் தபால் அலுவலகத்தின் பணியாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.
மேலும் 04ம் திகதிக்கு முன்னர் ஓய்வூதிய சம்பளம் கிடைக்கப் பெறாதவர்கள் மாத்திரம் ஓய்வூதிய சம்பளத்தை வழமையாக பெற்றுக் கொள்ளும் தபால் அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெற்றுத்தருமாறு கோருமாறு தபால் மா அதிபர் மேலும் அறிவித்துள்ளார்.