உலகத்தையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலால் எல்லா இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டும் விதிவிலக்கு அல்ல ஆனால் இந்தியாவில் எல்லா இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஆனாலும் அங்கு அனேகமாக ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது டாஸ்மாக் கடைகள் திறந்து இருக்கும்.
ஆனால் இந்த தடவை போடப்பட்ட ஊரடங்கு சட்டம் டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டது.
ஒரு சிலருக்கு இந்த ஊரடங்கு சட்டமானது மனதளவில் பாதித்தது மாத்திரமின்றி உயிரையும் எடுத்துள்ளது. இன்னும் சிலரைத் தவறான பாதையில் இருந்து நல்ல வழியில் திருப்பியும் உள்ளது.
அந்த வகையில் திருச்சூர் மாவட்டத்தில் குன்னம்குளம் அருகேயுள்ள துவானுர் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான சனோஜ் என்பவர் மது பாட்டில் கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும் மதுவுக்கு அடிமையான நான்கு பேரை மது மீட்பு மையத்தில் சேர்த்துள்ளனர்.
நேற்று இலங்கையில் பதிவான தகவல் 25பெண்களை கணவன் மார்கள் போதை வஸ்து இல்லாததால் அடித்து துன்புறுத்தி இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.