இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 4559 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 1125 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேலும் நேற்று பகல் 12மணி தொடக்கம் மாலை 06மணி வரை மாத்திரம் 342 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.