இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிப்புகள் கூடிக்கொண்டே போகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பொலிஸ் மா அதிபர் சில நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்

அரச மருந்தகங்கள் தவிர்ந்த அனைத்து மருந்தகங்களும் மூடப்பட வேண்டும். இருப்பினும் மருந்தகங்களினால் வீடுகளுக்குச் சென்று மருந்துகளை விநியோகிப்பதற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தியவசிய உணவுப் பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து வெளியேறி பொது இடங்கள், பிரதான வீதிகள், குறுக்கு வீதிகள் ஆகிய இடங்களில் நடமாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று பொலிஸ் மா அதிபர் சகல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply