இலங்கையில் 2020ம் ஆண்டிற்கு பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யவிருக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் 09ம் திகதி வரை பதிவுக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அசாதாரண நிலைமையைக் கருத்தில்கொண்டு பல்கலைக்கழகம் செல்லவுள்ள மாணவர்கள் பதிவு செய்வது தொடர்பில் அசௌகரியத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க பதிவுக் காலத்தை ஏப்ரல் மாதம் 09ம் திகதி வரை நீடித்துள்ளார்.