கொரோனா நோய்க்கொள்ளி மனித சமூகத்துக்கு ஒரு சாபமாக இருந்தாலும் சில வியாபார வர்க்கங்களுக்கு சந்தர்ப்பமாக அமைந்திருப்பது மனதுக்கு கவலை அளிக்கிறது.

மக்களின் நலனுக்காக அரசு ஊரடங்கு சட்டம் போட்டிருப்பது சில வியாபார கொள்ளையர்களுக்கு நல்ல லாபம் பார்க்கும் சட்டமாக அமைந்திருப்பதை மறுப்பதற்க்கில்லை. ஊரடங்கு சட்டம் காரணமாக அன்றாடம் கூலி வேளை செய்யும் தொழிலாளி சிறு தொகை பணத்தை எடுத்துக்கொன்டு கடைக்கு சென்றால் கொரானா காலப்பகுதிக்கு முன்பிருந்த விலையைப்பாற்க்க அதிகம் காணப்படுவது அதிர்ச்சியைக்கொடுக்கிறது.

அரசினால் நிர்னயித்த விலைக்கு விற்றால் தமது பழைய ஸ்டொக் முடிந்து விடும் என்று அதனையும் பதுக்கும் வியாபாரிகள் எம்மாத்திரம். இறைவனால் மனித படிப்பினை பெற ருடா..வருடம் தீபாவளி,பொங்கள் வருவதைப்போல அனர்த்தம்,அழிவு,நோய்த்தொற்று வந்தாலும் மனித வர்க்கத்தின் பொருள் ஈட்டும் பேராசை இரத்தத்தில் ஊரிய ஒன்றாக இருப்பதை மறுக்க முடியாது.

Leave a Reply