கடந்த 24 மணி நேரத்தில் 8,578 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்பெயின் நாட்டு நல்வாழ்வுத் துறை செய்தி வெளியிட்டுள்ளது. இது அந்நாட்டின் மொத்த பாதிப்பு 56,188 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் மொத்த உயிரிழப்பு 3291 என்ற கணக்கை இலகுவாக முறியடித்து ஸ்பெயின் இன்று 4089 பேரின் மரணம் மிகப்பெரிய கவலையை உலகில் பதியவைத்துள்ளது.
ஸ்பெயினில் வியாழக்கிழமை நிலவரப்படி உயிரிழப்பு 4,089 ஆக உயர்ந்துள்ளது. இது புதன்கிழமை 3,434 ஆக உள்ளது. சீனாவின் மொத்த உயிரிழப்பு 3,291 ஆக உள்ள நிலையில், ஸ்பெயின் அதை விஞ்சியுள்ளது.
ஸ்பெயினில் அவசரகால நிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஒட்டுமொத்தமாக உலக அளவில் கொரோனா வைரஸ் யினால் பாதித்தோர் எண்ணிக்கை 4,88,055 ஆகவும், பலி எண்ணிக்கை 22,049 ஆகவும் உள்ளது.